03rd February 2025 16:34:00 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. அப்சரா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுபெத்தவில் உள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைமையகத்தில் 2025 ஜனவரி 30,அன்று தொடர்ச்சியான நலன்புரி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணங்க, வீரமரணம் அடைந்த, ஊனமுற்ற மற்றும் சேவை செய்யும் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆசி வேண்டி, வண. பதலங்கல தம்மதேவ தேரர் அவர்களால் போதி பூஜை நடத்தப்பட்டது. போர் வீரரின் மனைவி குறித்த ஆலோசனை அமர்வை, ரணவிருவா பத்திரிகையின் ஆசிரியர் லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க நடத்தினார்.
மேலும், 20 போர் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களிடையே தலா ரூ.7,000.00 மதிப்புள்ள 20 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து போர் வீரர்களின் வாழ்க்கைத் துணைவியர்களுக்கும் தலைவியினால் சிறப்பு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், வாழ்க்கை துணைவியர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.