03rd February 2025 16:35:22 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் 2025 ஜனவரி 30 ஆம் திகதி கட்டுபெத்தவில் உள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டம் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. அப்சரா பீரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான நலன்புரி திட்டங்கள், புதிய குழு உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களுக்கான நிதி திரட்டும் நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.