Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd February 2025 20:56:54 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டத்தின் சிறப்பம்சங்கள் – 2025 ஜனவரி

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் 2025 ஜனவரி 31 ஆம் திகதி மாலை இராணுவ தலைமையக வளாகத்தில் உள்ள எண். 07 கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள பல்லூடக செயல்பாட்டு மண்டபத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீதத்துடன் ஆரம்பமானதுடன் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவினரினர் மற்றும் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் சேவை அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உரையாற்றினார். பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிர்வாகக் குழுவின் காலியாக இருந்த பதவிகளுக்கு பின்வரும் குழு உறுப்பினர்கள் அதன் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டனர்:

செயலாளர் - திருமதி பிரியங்கா விக்ரமசிங்க

உதவிச் செயலாளர் -திருமதி சுரங்கி அமரபால

பொது தொடர்பு அதிகாரி- திருமதி அனோஜா பீரிஸ்

உதவி பொது தொடர்பு அதிகாரி - திருமதி தர்ஷனி யஹம்பத்

அனைத்து திட்ட மேற்பார்வை அதிகாரி - திருமதி துளஷி மெகாபெல

கூட்டத்தினரிடையே உரையாற்றிய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, “தூய இலங்கை” என்ற அரசாங்கக் கொள்கையை கடைபிடிப்பதை வலியுறுத்தி எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, இலங்கை இராணுவ உறுப்பினர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் திருமதி பிரியங்கா விக்ரமசிங்க அவர்கள், முந்தைய கூட்டத்தின் கூட்டறிக்கையினை வாசித்துடன் பின்னர் கூடியிருந்த உறுப்பினர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் வரவுசெலவு கணக்குகளை பொருளாளர் மேஜர் பீஜீபீசீ குமாரி முன்வைத்தார். படைவீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வருடாந்த நலத்திட்டங்கள் மற்றும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தலைவி வலியுறுத்தினார்.

பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ரணவிரு குடும்பங்களுக்கு சில நன்கொடைகளை வழங்கினார். அதன்படி, கோப்ரல் ராஜபக்ஷ ஆர்.பீ.ஜே இன் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு ரூ. 100,000.00 மதிப்புள்ள மருத்துவ உதவி, 2 (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி சில்வாவிற்கு ரூ. 200,000.00 நிதி உதவியின் இரண்டாம் கட்டத்தின் கீழ் வீடு கட்ட திட்டமிடப்பட்ட ரூ. 600,000,00 உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

மாதாந்த கூட்டத்தின் முடிவில், 24 படையணிகளைச் சேர்ந்த போர் வீரர்களின் நலனுக்காக 24 சக்கர நாற்காலிகளை இராணுவ சேவை வனிதையர் பிரிவு நன்கொடையாக வழங்கியது. இந்த சக்கர நாற்காலிகள் போர்வீரர்கள் விவகார மற்றும் புணர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஏஎஸ்ஆர் விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமர்வில் பங்கேற்றதுடன் மேலும் மாதாந்த கூட்டத்தின் நிறைவுக்கு முன்பு, அனைத்து பங்கேற்பாளர்களும் குழு படம் எடுத்துகொண்டனர்.