Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd February 2025 20:59:22 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் சுதந்திர தின ஒத்திகைகளில் பங்குபற்றுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவியின் முழுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒருங்கிணைப்புடன், வரவிருக்கும் 77 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒத்திகைகளில் பங்கேற்கும் முப்படை வீரர்கள் மற்றும் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் பொதிகளை வழங்கும் திட்டம் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் பொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.

2025 பெப்ரவரி 01 திகதி காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றவர்களுக்கு அடையாளமாக இந்த சிற்றுண்டிப் பொதிகளை வழங்கினர்.

அணிவகுப்பின் இறுதி நாள் வரை அனைத்து பங்கேற்பாளர்களிடையேயும் இவ் வழங்கல் தொடரும்.