31st January 2025 15:26:58 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினரின் வருடாந்த பொதுக் கூட்டம் 2025 ஜனவரி 25 அன்று தொம்பேகொட இலங்கை இராணுவ போர் கருவி படையணி பாடசாலை கேட்போர் கூடத்தில் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியும் வழங்கல் கட்டளையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஒ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் உட்பட படையினரின் துணைவியர் இந்த ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு தாங்கினர்.
வருகை தந்த அவரை இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர். சம்பிரதாய மங்கள விளக்கேற்றலுடன் சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் வீரமரணம் அடைந்த போர் விரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், ஒரு சிப்பாயின் குடும்பத்தின் மருத்துவச் செலவுக்கு ரூ. 50,000.00 நிதியுதவி வழங்கப்பட்டது. லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ். சமிந்த அவர்களின் ஊக்கமளிக்கும் சொற்பொழிவுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்துடன் இது பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது என்பது குறிப்பிடதக்கதாகும்.