31st January 2025 10:37:51 Hours
கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் தொடர்ச்சியான சமூக நல திட்டங்கள் நடத்தப்பட்டன.
கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 ஜனவரி 24, அன்று, ரன்முத்துகல ஸ்ரீ விமலவன்ஷா சிறுவர் இல்லத்திற்கு சென்று சிறார்களுக்கு உணவு, எழுதுபொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் சத்துணவு பொதிகள் வழங்கினர்.
மறுநாள், கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கடுவெல வில்பர்ட் பெரேரா ஞாபகார்த்த முதியோர் இல்லத்திற்குச் சென்று, முதியோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சத்துணவும் வழங்கினர். பின்னர், கொமாண்டே படையணி தலைமையகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றதுடன், அங்கு கொமாண்டே படையணி சிவில் ஊழியர்களுக்கு வீட்டுப் பொருட்கள், உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன.
கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.