Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th January 2025 13:00:01 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் விரு கெகுளு பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆலோசனை பட்டறை

விரு கெகுளு பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் முகமாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சிவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஆலோசனைப் பட்டறை கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் 2025 ஜனவரி 28 ம் திகதி நடாத்தப்பட்டது. எட்டு விரு கெகுலு பாலர் பாடசாலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் இப் பட்டறையில் பங்பற்றினர்.

வைத்தியர் டி.டபிள்யூ துல்சர திசாநாயக்க அவர்கள் இந் நிகழ்வின் போது சிறப்பு உரை நிகழ்த்தினார். மேலும் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் அவருக்கு ஒரு சிறப்பு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

மென்னிங் டவுனில் உள்ள விரு கெகுலு பாலர் பாடசாலையின் பொறுப்பான சிரேஷ்ட உறுப்பினர் திருமதி சுரங்கி அமரபால, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் (ஒருங்கிணைப்பு), சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.