31st January 2025 10:26:03 Hours
இப்பலோகம விரு கெகுலு பாலர் பாடசாலை, அதன் பிள்ளைகளின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கண்கவர் கலை நிகழ்ச்சியை 2025 ஜனவரி 23 அன்று கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இக் கலை விழாவில் பிள்ளைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது. சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான திருமதி அனோஜா பீரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரை பாலர் பாடசாலை சிறார்கள் அன்புடன் வரவேற்றனர்.
பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன், முதல் நிகழ்வாக பாலர் பாடசாலை பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் பிள்ளைகள் தங்கள் கலை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர், இதில் வசீகரிக்கும் நடனங்கள், மெல்லிசைப் பாடல்கள் மற்றும் மகிழ்ச்சிகரமான கவிதைகள் அடங்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் வசீகரத்துடனும் படைப்பாற்றலுடனும் நிகழ்த்தப்பட்டது, இந்நிகழ்வின் இளம் திறமையாளர்களின் திறமை பார்வையாளர்களை பெருமைப்படும் வகையில் காணப்பட்டது.
21 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.