Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

31st January 2025 10:34:26 Hours

அநுராதபுரம் 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு

அநுராதபுரம் 'விருகெகுலு' பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்களின் வருடாந்த கலைவிழா 2025 ஜனவரி 23 அன்று அநுராதபுரம் இளைஞர் மன்ற அரங்கில் நடாத்தப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பாலர் பாடசாலை பிள்ளைகளின் திறமைகளை கொண்டாடியது.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி. அனோஜா பீரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன் அதைத் தொடர்ந்து வண்ணமயமான வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது. பிள்ளைகள் தங்கள் அழகியல் திறன்களை வசீகரிக்கும் நடன நிகழ்ச்சிகள், சிங்கள மற்றும் ஆங்கில நாடகங்கள் மற்றும் பாடல் மூலம் வெளிப்படுத்தினர்.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.