28th January 2025 19:51:00 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு, 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியுடன் இணைந்து 2025 ஜனவரி 23 ஆம் திகதி பங்கொல்ல அபிமன்சல III நல விடுதியில் வசிக்கும் போர் வீரர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்கள், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தலைவி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து போர் வீரர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கியதுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். கலிப்சோ இசைக்குழுவின் நிகழ்ச்சியுடன் அவர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.