Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd January 2025 14:09:58 Hours

தியத்தலாவை 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீழ் இயங்கும் தியத்தலாவை 'விரு கெகுலு' பாலர் பாடசாலை அதன் பிள்ளைகளின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கண்கவர் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 2025 ஜனவரி 21 ஆம் திகதி எல்ல டோர்ச் சினிமா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, திறமைகளை வெளிப்படுத்தல் மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளை ஒன்றிணைத்தது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் இந்த முயற்சி, நாடு முழுவதும் பாலர் பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நடத்துவதற்கான அதன் பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இது போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இராணுவம் அல்லாத பணியாளர்களுக்கும் தரமான கல்வி மற்றும் நலன்புரி வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்த கலை நிகழ்ச்சி, பிள்ளைகள் தங்கள் திறமைகளை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்த ஒரு தளமாக அமைந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி. சுனேத்ரா சந்திரசேகர அவர்கள் கலந்து கொண்டார். மரியாதை மற்றும் விருந்தோம்பலின் அடையாளமாக, பாரம்பரிய தாம்பூலம் வழங்கி பாலர் பாடசாலை பிள்ளைகள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து முதல் நிகழ்வாக பாலர் பாடசாலை பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் பிள்ளைகள் தங்கள் கலை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர், இதில் வசீகரிக்கும் நடனங்கள், மெல்லிசைப் பாடல்கள் மற்றும் மகிழ்ச்சிகரமான கவிதைகள் அடங்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் வசீகரத்துடனும் படைப்பாற்றலுடனும் நிகழ்த்தப்பட்டது, இந் நிகழ்வின் இளம் திறமையாளர்களின் திறைமை பார்வையாளர்களை பெருமைப்பட வைத்தது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம்/விடுதி பிரிகேடியர் கே.எம்.ஜே.என்.ஆர்.கே. சந்திரசேகர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.