22nd January 2025 13:19:09 Hours
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதை பிரிவு, கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதை பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கெமுனு ஹேவா படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கெமுனு ஹேவா படையணியின் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கான ‘பிப்பென விரு தரு’ சித்திர போட்டியை ஏற்பாடு செய்தது.
109 சமர்ப்பிப்புகளின் நுணுக்கமான மதிப்பீட்டைத் தொடர்ந்து, பன்னிரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 2025 ஜனவரி 19, அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் பரிசு வழங்கும் விழா நடத்தப்பட்டது. வெற்றியாளர்கள் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் அத்தியாவசிய பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றதுடன், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.