22nd January 2025 13:24:15 Hours
21வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலாந்தி வனசிங்க அவர்களின் மேற்பார்வையில் சிரேஷ்ட அதிகாரவனையற்ற அதிகாரிக்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
வீடு வழங்கும் விழா 2025 ஜனவரி 19ம் திகதி இயந்திரவியல் காலாட் படையணி நிலைய தளபதி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த திட்டத்திற்கான நிதி உதவி, 'ஹிசட்ட செவனக்' என்ற கருத்தின் கீழ், மேஜர் ஜெனரல் அனில் பீரிஸ் (ஓய்வு) ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் ஒருங்கிணைப்புடன் நன்கொடையாளரால் வழங்கப்பட்டது. வீட்டின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்வதற்கு 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினரின் ஆதரவும் உள்நாட்டு மூலப்பொருட்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது.
மேலும், இவ் விழாவின் போது இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் ரூபா.20,000.00 மதிப்புள்ள மின்சார உபகரணங்களும் உலர் உணவு பொதிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.