Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st January 2025 16:25:47 Hours

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரின் மாதாந்த கூட்டம்

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரின் மாதாந்த கூட்டம் 2025 ஜனவரி 18, அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் நடபெற்றது. இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபகலா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் போது, கடந்த கால நலன்புரி முயற்சிகள் மற்றும் நடப்பு ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

நிகழ்வின் ஒரு பகுதியாக, பிற படையினரின் கர்ப்பிணி மனைவிகளுக்கு 61 மகப்பேறு உதவிப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. கூட்டத்திற்கு முன்னதாக, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.