21st January 2025 16:27:34 Hours
இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்ஜீ சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ ரைப்பிள் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2024 டிசம்பர் 24 ம் திகதியன்று வெள்ளவத்தை ஸ்ரீ ஜினானந்த சிறுவர் அபிவிருத்தி நிலைய பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, தானம் வழங்கல் மற்றும் தர்ம பிரசங்கம் நடைபெற்றது. அன்றைய மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் இலங்கை ரைபிள் படையணியின் கலிப்சோ இசைக் குழுவினரால் இன்னிசையும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.