20th January 2025 10:52:02 Hours
மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் 2025 ஜனவரி 18 அன்று நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பிரதம அதிதியை பிள்ளைகள் தாம்பூலம் வழங்கி வரவேற்றதுடன், சிறப்பு விருந்தினர்கள் பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றிய பின்னர் பிள்ளைகள் தங்கள் திறமைகளை அரங்கேற்றினர்.
தொடர்ந்து, பாலர் பாடசாலை பிள்ளைகள் குழுவினரால் வண்ணமயமான வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது, அதனைத் தொடர்ந்து அற்புதமான நடன நிகழ்வுகள் இடம்பெற்றன. வருடாந்த கலை விழா, பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் மூலம் பாலர் பாடசாலை பிள்ளைகளின் துடிப்பான திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.
இலங்கை பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் மானிங் டவுன் விரு கெகுலு பாலர் பாடசாலை பொறுப்பாளரும் மற்றும் சிரேஷ்ட சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினருமான திருமதி சுரங்கி அமரபால, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பாலர் பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.