18th January 2025 11:50:43 Hours
5 வது இராணுவ பொலிஸ் படையணி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினருடன் இணைந்து மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நன்கொடை நிகழ்ச்சியையும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் அத்தியாவசிய மகப்பேறு உதவி பொருட்கள் வழங்களையும் 2025 ஜனவரி 4 அன்று நடத்தியது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தெலாவல பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, வண. லின்தகல ஆனந்த தேரர் நிதியுதவி அளித்த சுமார் ரூ. 490,000.00 மதிப்புள்ள நன்கொடை மற்றும் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக சுமார் ரூ. 300,000.00 நிதி பங்களிப்பு வழங்கப்பட்டது.
படையணி தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவுகள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் மகப்பேறு உதவி பொருட்கள் வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் உணவு பரிமாறுவதில் உதவியதுடன் இராணுவ நடனக் குழுவால் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகளுக்கு உதவுவதற்காக ரூ. 100,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.