15th January 2025 17:36:35 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதயுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையில், தற்போது வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத சேவையிலுள்ள போர்வீரர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வீட்டுவசதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரவாணையற்ற அதிகாரி II கே.எம்.என்.பி திசாநாயக்க அவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட வீடு 2025 ஜனவரி 12 ஆம் திகதி 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிதி உதவி இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் வழங்கப்பட்டதுடன், 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி வீடுகளை வெற்றிகரமாக கட்டிமுடிப்பதற்கு தேவையான மனித வளத்தை வழங்கியது. இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.