11th January 2025 19:01:51 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் 2025 ஜனவரி 10, அன்று இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வாகிக்கப்படும் சேவை நிலையங்களை பார்வையிட்டார்.
இந்த விஜயத்தில் சேவை வனிதையர் நலன்புரி கடை, வெதுப்பகம்/சிற்றூண்டிசாலை, ஆண்களுக்கான சலூன், பெண்கள் அழகு நிலையம், சிறிய விருந்து மண்டபம், தையல் நிலையம், அக்குரேகொட மற்றும் கின்னதெனியாவில் உள்ள நலன்புரி கடைகள் மற்றும் சிற்றூண்டிசாலைகள், சூரியகாந்தி கிராமம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தூய்மையைப் பராமரித்தல், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பொருட்களை கவர்ச்சிகரமான முறையில் காட்சிப்படுத்துதல், சுகாதார வசதிகளின் தரத்தை மேம்படுத்துதல், கட்டிட பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். உயர்ந்த சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உணவு தயாரிப்பு மற்றும் பிற உற்பத்தி செயல்முறைகளில் உயர்தர பொருட்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.