10th January 2025 11:09:56 Hours
2024 நவம்பர் 30 ம் திகதி தாய்லாந்து பாங்கொக்கில் நடந்த சர்வதேச உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு புரோ லீக் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற தாரக சந்தரேனு பெரேராவை கௌரவிக்கும் வகையில் 2025 ஜனவரி 05, அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் சிறப்பு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
பரந்தனில் மனிதாபிமான நடவடிக்கையின் போது தனது தந்தையை தியாகம் செய்த தாரக, தனது கனவுகளை அடைய தனது துணிச்சலினால் வலிமையையும் தைரியத்தையும் பெற்றார்.
நிகழ்வில், கெமுனு ஹேவா படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதை பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன ஆகியோர் அவருக்கு நினைவு பரிசு வழங்கினர். பின்னர், தாரகவின் தாயார் அவரது தந்தையின் நினைவாக படையணி நினைவுச் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.