Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

08th January 2025 12:49:29 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பெறுப்பேற்பு

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 17 வது தலைவியாக திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் 2025 ஜனவரி 07 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியை, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி மரியாதையுடன் வரவேற்றார். இந்நிகழ்வில் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டதுடன் பாரம்பரிய மங்கள விளக்கேற்றலிலும் கலந்துக் கொண்டார்.

சம்பிரதாயத்திற்கு இணங்க இராணுவ சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி சுபநேரத்தில் புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் அனைத்து படையணிகளின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியர் கலந்துகொண்டு, புதிய தலைவிக்கு ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்து குழு படம் எடுத்து கொண்டதுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி பதவியேற்றவுடன் உரை நிகழ்த்தியதுடன், பின்னர் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் சுருக்கமான விவரம் இங்கே.

இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 17 வது தலைவியாக 2025 ஜனவரி 07 அன்று பதவியேற்றார்.

திரு. சுமனதிஸ்ஸ சமரசிங்க திசாநாயக்க மற்றும் திருமதி பிரியாணி வனசிங்க ஆகியோருக்குப் பிறந்த இவர், மூன்று உடன்பிறப்புகளில் ஒருவராவார், இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். நீர்கொழும்பு, ஆவே மரியாள் கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.

தற்போதைய பதவிக்கு முன்னர், அவர் பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக பணியாற்றினார், அங்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், அறிவை மேம்படுத்துதல் மற்றும் வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஏராளமான நலத்திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் தாராளமான பங்களிப்புகள் மூலம் மருத்துவ உதவி மற்றும் வீட்டுவசதி வழங்குவது அவரது முயற்சிகளில் அடங்கும்.

பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி ரோட்ரிகோ அவர்கள் கன்னர்ஸ் வீரர்களின் தரத்தை உயர்த்துவதற்காக புதுமையான வருமானம் ஈட்டும் நலத்திட்டங்களை உருவாக்குவதற்கு தீவிரமாக தலைமை தாங்கியுள்ளார். படையினரின் பொருளாதார நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அவர் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார், இது பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதிசெய்து அவர்களின் குடும்பம் மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையில் இணக்கமான சமநிலையை ஊக்குவித்தது. அவரது முயற்சிகளில் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் அடங்கும்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி ரோட்ரிகோ அவர்கள் தனது விரிவான அனுபவத்துடன், இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நல்வாழ்வை மேலும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இராணுவ சமூகத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அர்த்தமுள்ள ஆதரவை தொடர்ந்து வழங்குவதே அவரது தொலைநோக்குப் பார்வை.