Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

01st January 2025 15:46:23 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் புதிதாக நிர்மணிக்கப்பட்ட வீடு திறந்து வைப்பு

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக களுத்துறையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு 18 டிசம்பர் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வழங்கல் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஒ அவர்கள் கலந்து கொண்டார்.

நிகழ்வின் போது, பிரதம அதிதி உத்தியோகபூர்வமாக வீட்டு சாவியை பயனாளியிடம் கையளித்தார். உள்நாட்டு நன்கொடையாளர்களின் தாராள உதவியுடன், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு வழங்கிய நிதியுதவியின் மூலம் கட்டுமான பணி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.