29th December 2024 17:28:04 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வையில் 2024 டிசம்பர் 26 அன்று இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
அதன்படி, தளபதியின் செயலகம், இராணுவத் தலைமையகம் மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஆகியவற்றில் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சியானது பயனாளிகளுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதையும் அவர்களின் நிதிச்சுமையை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நன்கொடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.