27th December 2024 08:37:38 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு, 2024 டிசம்பர் 23 அன்று படையணி தலைமையகத்தில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசுவித்த சிப்பாய்க்கு உதவுவதற்காக நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கங்கா ஹேரத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்த முயற்சியில் புத்தகங்கள், பாடசாலை பைகள், காலணிகள், சீருடைமற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், பிள்ளைகளின் பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், இந்த நிதியுதவி மாதாந்தம் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.