23rd December 2024 14:39:07 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு தனது வருடாந்த புத்தக நன்கொடை நிகழ்ச்சியை 20 டிசம்பர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் நடாத்தியது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் சேவையாற்றும் இராணுவ வீரர்களின் பாடசாலை செல்லும் 3,240 பிள்ளைகளுக்கு ரூ. 4.3 மில்லியன் பெறுமதியான புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதன் போது அடையாளமாக 28 பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் ரூ. 2,000 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
மேலும், 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்து விளங்கிய 33 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.