23rd December 2024 13:37:40 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் 33 சிவில் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் ரூ.165,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை 2024 டிசம்பர் 18, அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக கேட்போர்கூடத்தில் வழங்கியது.
மேலும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு, ஒரு சிவில் ஊழியர் மற்றும் மாற்றுத்திறனாளி போர்வீரர் ஆகியோருக்கு வீடு கட்டுவதற்காக தலா 200,000 வீதம் வழங்கியது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.