Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

20th December 2024 14:34:48 Hours

1 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியினரால் கற்றல் உபகரண விநியோகம்

1 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் ஏற்பாட்டில் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் 147 பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வு 15 டிசம்பர் 2024 அன்று பனாகொடை 1 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏகே. இராஜபக்ஷ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.