18th December 2024 15:26:53 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 15 டிசம்பர் 2024 அன்று போலகலவில் உள்ள முன்னாள் படைவீரர் இல்லத்தில் நத்தார் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுடன் இணைந்து, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் கெமுனு ஹேவா படையணியின் அலகுகளின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் நத்தார் கெரோல், பாதிரியாரின் சொற்பொழிவு மற்றும் ஒரு உரையாடல் போன்றன நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் படைவீரர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நத்தார் தாத்தாவினால் பரிசுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.