17th December 2024 17:51:36 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் 27வது தலைவியாக திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்கள் 12 டிசம்பர் 2024 அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த அவரை இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி ஷாஷிகா கருணாரத்ன அவர்கள் மரியதையுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். புதிய தலைவிக்கு பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.