17th December 2024 14:17:05 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மேற்பார்வையின் கீழ், 'தலிதா கூடம்' புனித அன்னாள் கன்னியர் மட விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர். 11 டிசம்பர் 2024 அன்று பிட்ட கோட்டை அன்னாள் கன்னியர் மட விடுதியின், நத்தார் பண்டிகையை முன்னிட்டு நலன் மற்றும் பொதுத் தேவைகள் தொடர்பாக கவனம் செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது, மருந்துகள், உலர் உணவுப் பொதிகள், துப்புரவுப் பொருட்கள், ஆடைகள், புனரமைக்கப்பட்ட முச்சக்கரவண்டி, மற்றும் நிதியுதவியாக 130,000.00/= ரூபா நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கலிப்சோ இசை நிகழ்ச்சியுடன் தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்தில் கலந்துகொண்டனர்.