Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th December 2024 07:08:57 Hours

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அபிமன்சல நலவிடுதிக்கு விஜயம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2024 டிசம்பர் 11 அன்று குருநாகல், பாங்கொல்ல, அபிமன்சல-3 நல விடுத்க்கு விஜயம் மேற்கொண்டனர்.

விஜயத்தின் போது விடுதியிலுள்ளவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சிகிச்சையில் உள்ளவர்களுடன் ஊடாடும் அமர்வுகளில் ஈடுபட்டனர். குழு புகைப்படம் மற்றும் சிற்றுண்டி விருந்துபசாரத்துடன் விஜயம் நிறைவடைந்தது.

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.