13th December 2024 07:10:22 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 07 டிசம்பர் 2024 அன்று கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடாத்தியது.
இந்நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் திருமதி துனுஜா சுபசிங்க ஆகியோரினால் விரிவுரை நடாத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக, மாதாந்த கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.