Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th December 2024 08:25:18 Hours

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரால் பாடசாலை பைகள் நன்கொடை

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி, பொறியியல் சேவைகள் படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை பைகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை 7 டிசம்பர் 2024 அன்று 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியில் நடாத்தியது.

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான திருமதி ஜே.பீ. டெக்லா அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது, 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் சிப்பாய்களின் 294 பிள்ளைகள் இந்த நன்கொடையின் மூலம் பயனடைந்ததுடன், பங்கேற்றவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பாடசாலை பைகள் நன்கொடை 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.பி.டி.பீ. டி சில்வா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.