Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th December 2024 11:44:03 Hours

இராணுவ சேவை வனிதையரால் படையினர் மற்றும் பிள்ளைகளுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணம் வழங்கல்

இராணுவ சேவை வனிதையர் பிரிவு நன்கொடை வழங்கும் திட்டத்தில் 2024 டிசம்பர் 11 ம் திகதியன்று இராணுவத் தலைமையக சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 200 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும், ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், 30 பாடசாலை உபகரணங்கள் உதவிப் பணிப்பாளரிடம் (முப்படைகளின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு) வழங்கப்பட்டது. இந்த பொருட்கள் பின்னர் மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய பாலர் பாடசாலையான 'ஸ்வான்ஸ்' பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.