12th December 2024 11:48:37 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் படையினரின் அர்ப்பணிப்பான சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் 52 படையினருக்கு ரூ. 260,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் 05 டிசம்பர் 2024 அன்று இடம்பெற்ற டிசம்பர் மாதக் கூட்டத்தின் போது இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.