Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th December 2024 15:29:24 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி அப்சரா பீரிஸ் அவர்கள் 10 டிசம்பர் 2024 அன்று இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தனது கடமைகளை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தலைவி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், மேற்கொள்ளவிருக்கும் நலத்திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தினார்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.