11th December 2024 18:14:57 Hours
திருமதி உதாரி கமகே அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக 10 டிசம்பர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த அவரை, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் அவர் தனது புதிய நியமனத்தை ஏற்க உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
தனது கடமைகளை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தலைவர் அவர்கள் வரவிருக்கும் நலத்திட்டங்களில் தொடர்பாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.