Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th December 2024 14:03:28 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரினால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி 07 டிசம்பர் 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

ரூ. 200,000, பெறுமதியான இந்த நன்கொடை திட்டத்தில் படையணி தலைமையகத்தில் பணியாற்றும் 21 இராணுவ படைவீரர்களும் நான்கு சிவில் ஊழியர்களும் பயனடைந்தனர். வழங்கல் நிகழ்வினை தொடர்ந்து கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்குபற்றினர்.