Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th December 2024 22:47:29 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரால் நூலகம் திறப்பு

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 200 புத்தகங்களுடன் கூடிய புதியதாக நிர்மாணிக்கப்பட்ட நூலகம் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பாவனைக்காக கரந்தெனிய படையணி தலைமையகத்தில் 01 டிசம்பர் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விவசாயம் மற்றும் கால்நடைப் பாடசாலையைச் சேர்ந்த திரு. கலன சி. வாகிஸ்தா, திருமதி நீலங்க ரத்நாயக்க மற்றும் சில தனிநபர்கள் பெறுமதிமிக்க பல புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினர். இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.