07th December 2024 07:23:18 Hours
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேவையாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 29 நவம்பர் 2024 அன்று இராணுவ மருத்துவமனை நாரஹேன்பிட்டி கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சியில் மொத்தம் 120 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ‘நேச்சர் சீக்ரெட்’ அனுசரனையில் பரிசுப் பொதிகளை வழங்கியதுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் சுவையான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.