05th December 2024 19:41:07 Hours
விஜபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் மாதாந்த பொதுக்கூட்டத்தை 30 நவம்பர் 2024 அன்று குருநாகல், போயகனே த சல்யூட் பல்லூடக மண்டபத்தில் விஜபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தியது.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் விஜபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம், சேவை வனிதையர் பிரிவின் பாடலுடனும், வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு செலுத்தப்பட்ட ஒரு நிமிட மௌன அஞ்சலியுடனும் ஆரம்பமாகியது.
இதன் போது, 2021-2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ பெற்று சித்தியடைந்த 20 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. லெப்டினன் கேணல் எல். குணதிலக்க அவர்களினால் நடாத்தப்பட்ட ‘மகிழ்ச்சியான குடும்பம்’ எனும் தலைப்பிலான ஆலோசனை விரிவுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. விஜபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.