03rd December 2024 14:46:14 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 21 நவம்பர் 2024 அன்று ராகம ரணவிரு நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, போர்வீரர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. விநியோகத்தைத் தொடர்ந்து, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுவரும் போர்வீரர்களுடன் கலந்துரையாடியதுடன் குழு படம் எடுத்துகொண்டனர்.
கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.