Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

03rd December 2024 17:12:34 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையரால் நலத் திட்டங்களுக்கு ஆதரவாக ‘கோ குக்கோ’ மேடை நாடகம்

இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் திரு.மிஹிர சிறிதிலக இயக்கிய ‘கோ குக்கோ’ என்ற மேடை நாடகத்தை 2024 நவம்பர் 30 அன்று எம்பிலிப்பிட்டிய டி ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த மண்டபத்தில் அரங்கேற்றினர்.

நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜீபீஎஸ்கே அபேசிங்க அவர்களுடன் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.