02nd December 2024 15:03:14 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலுகா நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 30 நவம்பர் 2024 அன்று 2 வது இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினரால் புலமைப்பரிசில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் கற்றல் உதவித் தொகையாக 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) பரீட்சை மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சை ஆகியவற்றில் பெறுபேறு பெற்ற 36 மாணவர்களுக்கு ரூ. 570,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், தேசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. திலின ஹேவகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உதவி பொருளாளர் திருமதி நெத்மினி முத்துமாலி அவர்களின் ஒருங்கிணைப்பில் தேசிய அபிவிருத்தி வங்கியினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 18 ஜோடி பாடசாலை காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.