Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

30th November 2024 14:38:09 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் நன்கொடை வழங்கல்

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலாந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 நவம்பர் 22 ஆம் திகதி முல்லேரியாவிலுள்ள தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் வார்டு இலக்கம் 06 இல் நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நோயாளர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்ட்டதுடன், 32 நபர்களுக்கு போசாக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.