28th November 2024 15:10:30 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் மேற்பார்வையுடன் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு வீடு நிர்மாணிக்கப்பட்டது. இந்த வீடு 2024 நவம்பர் 20 அன்று பஹலவத்தையில் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இத் திட்டத்திற்கான நிதி பங்களிப்பை இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி வழங்கியது. இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.