28th November 2024 11:53:00 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் 25 நவம்பர் 2024 அன்று இராணுவ தலைமையக வளாகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் இசைக்கப்பட்டதுடன், உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உரையாற்றுகையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நந்தனி சமரக்கோன் அவர்கள் முன்னைய கூட்டத்தின் அறிக்கையை வாசித்ததுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீ.ஜி.பீ.சீ குமாரி அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
நலன்புரி திட்டத்தின் மூலம் திருமதி ஜானகி லியனகே அவர்களால் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நான்கு படையினருக்கு வீட்டு நிர்மாண பணிகளுக்காக தலா ரூபா 600,000/= வழங்கப்பட்டது. மேலும், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க ஐந்து வீரர்களுக்கு தலா 450,000/- வழங்கப்பட்டதுடன் அதேபோன்ற நோக்கங்களுக்காக வேறு இரு படையினருக்கு தலா 250,000/- வழங்கப்பட்டது.
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவாக இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வீரர்கள் மற்றும் 30 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியதுடன், இராணுவத்தினரின் 30 பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கியது. மேலும், இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் 100 படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மாதாந்த பொதுக் கூட்ட நிறைவின் போது பங்கேற்பாளர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.