28th November 2024 06:30:41 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோனின் வழிகாட்டலின் கீழ் பனாகொட 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் பீகேஏ குமார அவர்களின் புதிதாகப் பிறந்த முன்று குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஆதரவாக பால் மா பாக்கெட்டுகள் 21 நவம்பர் 2024 அன்று வழங்கப்பட்டன.
இதன் போது ஐந்து மாததிற்கு பால் மா கொள்வனவு செய்யும் வகையில் ரூபா 125,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.