Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

27th November 2024 21:02:52 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோனின் வழிகாட்டலின் கீழ் 23 நவம்பர் 2024 அன்று கன்னொருவ இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பாடசாலை நினைவுத்தூபியில் யுத்தத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் நன்கொடை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பாடசாலையின் பங்களிப்புடன், போர்வீரர்களின் குடும்பங்களுக்கு பீங்கான் பொருட்கள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.