27th November 2024 21:08:54 Hours
இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதந்தபொதுக்கூட்டம் 23 நவம்பர் 2024 அன்று பல்லேகலையில் உள்ள இலங்கை ரைபிள் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணி ஒருங்கிணைப்பு மையத்தில் நடைபெற்றது.
இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையரின் பிரிவின் தலைவி திருமதி. எச்.ஜி. சுவர்ணலதா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில், இராணுவ வீரர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகள், இராணுவ முன்னோடி படையணி வீரர்கள் மற்றும் சீவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், இராணுவ முன்னோடி படையணி இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதார சுமையை குறைக்க நிவாரணம் வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.